தஞ்சை
தொடர்ச்சியான பயணங்களின் பொழுது நிறைய கற்கிறேன்
நல்லோர் பலரை காண்கிறேன். மகிழ்ச்சியுடன் தொடங்கிய காலை பொழுது ஒன்றில் , ஜன்னல் ஒர இருக்கையில் கையில் பிடித்த புத்தகம் ஒன்றை புரட்டிய படி ஒரு பயணம் .அது தஞ்சை
இது வரை நான் பார்த்து அறியாத பல முகங்களை காண்கிறேன் , கருமலை நகரின் மலைகளையும் காடுகளையும் கண்ட என்கண்கள் தஞ்சை தரணியை கண்டு வியந்தன . காவிரியின் பிரமாண்டம் கண்டு நான் வாய் பிளந்தேன்
நீண்ட நெடிய, அகண்ட காவிரியை கண்டதும் என் தென் பெண்ணை நதியை ஏனோ மனம் நினைத்தது , தஞ்சை ஆண்டவனின் நகரம் , சோழர்களின் தலைநகரம் , ராஜராஜ சோழன் வாழ்ந்து ஆண்ட நகரம் , இங்கு தானே சோழர் குலம் தழைத்தது , இங்கு இருந்து தானே உலகம் வியக்கும் பெரிய கோவிலுக்கு திட்டமிட்டான் , மெதுவாக மனம் நிகழ் காலம் வந்தது ,
இன்றைய தஞ்சை , கால சூழலால் நிரம்ப மாறி இருந்தது தஞ்சை எனக்கு முதலில் பரிச்சயமானது அமரர் கல்கியில் எழுத்தில் , பின்பு தஞ்சை மக்களின் வாழ்வியல் முறைகள் , தஞ்சை ராஜராஜன் காலத்தில் எத்தகைய உயர்ந்த வாழ்க்கையில் இருந்தது, உலகிற்கே நாகரீகம் கற்று தந்தது என்று பாலகுமாரனின் உடையாரின் முழுதும் அறிமுகமானது ,
நிகழ்கால தஞ்சை பெரிய மாற்றத்துடன் இருந்தது ,மக்களின் வாழ்கை முறையும் மாறி தான் இருந்தது , ரயில் நிலையத்தில் இருந்து கார் பிடித்து தஞ்சை பெரிய கோவில் என்று சொன்னதும்,
சார் .. நூறு ருபாய் சார் என்றான் .
நான் மிகவும் வியந்தேன் , வெறும் ௩ கிலோ மீட்டர் கூட இருக்காது அதற்கு நூறு ரூபாயா என்று வியந்து, சரி என்று தலை ஆட்டி சென்றேன்
என் கண் முன்னே ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் கோவிலை கண்டதும் கண்களில் கண்ணீர் துளிர்த்தது .
எத்தனை வருடங்கள் .அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரையும் கண்ட கோவில் இது , இதற்காக உருவான போர்கள் , இதற்காக மடிந்த வீரர்கள் இதற்காக செய்த தியாகங்கள் என அத்தனையும் நினைவிற்கு வந்தன .
ஒரு சாம்ராஜ்யத்தின் வெற்றி என்பது எத்தனை வருடங்கள் ஆட்சி என்பது அல்ல , ஆயிரம் வருடங்கள் கழித்தும் நிலைத்து நிற்பது . சோழனின் வெற்றி அப்படி தான் நின்றது , விஜயாலயனில் ஆரம்பித்து சோழர் குலம் வீழ்ந்தாலும் அவர் தம் வெற்றி கல்லிலே செதுக்க பட்டது ,இதனை ஆண்டுகள் ஆயினும் தமிழர் நெஞ்சில் நின்றது , இது தான் வெற்றி , இது தான் வரலாறு ,
இன்னும் சொல்ல ஆயிரமாயிரம் உண்டு . என் பார்வையில் இன்னும் அதிகம் , பெரிய கோவிலின் ஒவொரு கல்லிலும் தனி வரலாறு உண்டு , தரணியை ஆண்டவனின் மாபெரும் புகழை கண்டதும் நிஜம் பெருமையால் நிமிர்கிறது
வாழ்க சோழம் , வாழ்க தமிழர் , வாழ்க எம்மக்கள்
அடுத்து தகடூர் நாயகன் அதியன் ...
இவன்
ந வா பிரபு ....


No comments:
Post a Comment