Wednesday, April 9, 2025

மீண்டும் நான்




எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. 
இந்த தளத்திற்கு வந்து வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு போலவே இருப்பதில்லை பல சூழல்கள் எல்லாம் நம்மை ஆட்டுவிக்கிறது வேலை நிமித்தமும் குடும்ப நிமித்தமும் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். 


சரி இப்போது என்ன உனக்கு இந்த வேலை என்று நீங்கள் யோசிக்கலாம்..


விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதே அடுத்து பிறப்போகும் வெற்றிகளுக்கான அடித்தளம் என்பதை உணர்ந்து, இங்கே என் கவிதைகளைப் பற்றியும் நான் ரசித்த பார்த்த மனிதர்களை பற்றியும் படித்த புத்தகங்களை பற்றியும் உங்களுடன் நான் பேச இருக்கிறேன்..


இது எனக்கான ஒரு சுய பதிவு மட்டும் தான் என்றாலும் கட்டாயம் வாய்ப்பு இருப்பவர்கள் இதை படித்து தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிக்கலாம். 


முழுக்க முழுக்க இலக்கிய தாகத்தோடும் மனிதர்களைப் பற்றிய தேடலோடும் பயணித்து விரும்புகிறேன் .

முடிந்தவரை வாரத்திற்கு ஒரு பதிவு என்றாவது நான் முயற்சி செய்கிறேன் நன்றி 


பிரபு - 

No comments:

Post a Comment

மீண்டும் நான்

எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.  இந்த தளத்திற்கு வந்து வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு போலவே இருப்பதில்லை பல சூழல்கள் எல்லாம் நம்மை ஆட்டுவ...