நெடுநாளைய ஆசை இது
என் மனதின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு சரியான இடமாய் இது தோன்றுகிறது .,இங்கு உங்களோடு நான் எனக்கு தெரிந்ததை எனக்கு புரிந்ததை பேச காத்திருக்கிறேன் ....
நான் பிரபு ...தென் பெண்ணை நதியின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவன் ., கெங்கலேரி எனும் பெயர் உடைய என் கிராமம் மிகவும் அழகானது . சுற்றிலும் பசுமையால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் மாமரங்களும் , தென்னை மரங்களும் என்று இயற்கை தன் அற்புதங்களை செய்திருக்கிறது . என் பள்ளி பருவத்தின் வறுமையின் கொடிய நேரங்களை அந்த இயற்கை மட்டுமே ஆறுதல் அளித்திருக்கிறது .
சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறிய குடும்பமாய் இருதோம், உறவுகள் உறவாடி கெடுக்க, கொஞ்ச தடுமாறிய என் குடும்பத்தின் வறுமையிலும் ஒரு சந்தோசம் இருக்கவே செய்தது .,
உறக்கம் தொலைத்த அந்த ஒரு பின் இரவில் என் வீட்டு கண்ணாடி ஓட்டின் வழியே தெரிந்த முழுமத்தியின் அழகில் சொக்கி இருக்கிறேன் , அந்த பதின் வருவதின் வனப்புகள் எல்லாம் எனக்கு உலகின் பேரழகாய் தெரிந்தன
நிஜத்தில் எல்லாமே மாயை என்பது அன்று புரிய வில்லை ., வாழ்கை மிக கருணையற்ற ஒன்று . பொட்டில் அடித்தாற்போல் நமக்கு சொல்லி கொடுக்கும் . நல்ல தந்தை இன்று வழிகாட்ட நல்ல குருவும் இன்றி தான்தோன்றி தனமாய் வாழதொடங்கிய நேரத்தில் யார் செய்த புண்ணியமோ புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது

புத்தகம் என்னை நித்தம் நித்தம் புதியவனாய் இருக்க செய்தது
ஆரம்பத்தில் ராஜேஷ்குமாரின் புத்தகத்தில் என்னை மூழ்கடித்த நான் பிறகு இந்திரா சௌந்தரராஜன் புதினத்தில் மூழ்கினேன் .
பிறகு எண்ணற்றவரின் புத்தகத்தில் என்னை பறி கொடுத்தாலும் , எனக்குள் கற்பனை தீயை எரிய செய்த்தவரில் முக்கியமானவர் அமரர் கல்கி , கள்வனின் காதலியை ஆரம்பம் கொண்டு , பிறகு பொன்னியின் செல்வனில் , சோழ சாம்ராஜ்யத்தில் என்னை பறிகொடுக்க செய்த வித்தகர் அவர் , என்னை மட்டுமல்ல எண்ணற்றவருக்கு அவர் மட்டுமே வரலாற்று பெட்டகம் , பூங்குழலியும் வந்திய தேவனும் , அருள் மொழி வர்மரும் என இதயத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தனர் . நல்ல புத்தகங்கள் எனக்கு கிடைக்க நல்லோர் பலர் உதவினர்
அப்படிப்பட்டவர்களின் உதவிகளினால் செந்தமிழ் மொழி எனக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்று அறியாமல் நான் அந்த பாதையில் பயணிக்க தொடங்கினேன் ., இதில் நான் சந்தித்த மனிதர்கள் அவர்களின் குண நலன்கள் அவர்கள் சொல்லிய வாழ்வியல் பாடங்கள் அனைத்தையும் பேச போகிறேன் . பேசுவோம் .,
இவன்
ந வா பிரபு ....
No comments:
Post a Comment