Monday, July 31, 2017

யாதும் ஊரே ! யாவரும் கேளீர்


வணக்கம் .


          மனதிற்கு இனிய நிகழ்வுகள் பல நிகழ்வுகள் நடந்தன எனக்குள்ளும் என் வீட்டிலும் , உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்வு.
               யாதும் ஊரே ! யாவரும் கேளீர்  என்ற பழமொழியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. என்ன பழமொழி இது ? இதன் தாத்பரியம் என்ன ? என்று சிந்தையில் பெருக்கெடுத்தது எண்ணங்கள்  பல ! , இந்த உலகில் உள்ள எல்லா நாடும் , அதில் உள்ள எல்லா  ஊரும் நமதே ! கேட்க யாரும் இருக்க மாட்டார் , அகிலமனைத்தும் நமக்கே சொந்தம் , எல்லோரும் நம் உறவுகள் என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உரைத்த பன்மொழி இது
                             
                அகன்று விரிந்த இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற மொழிகள் எண்ணற்ற நாடுகள் எண்ணில் அடங்கா மதங்கள் என பல உள்ளன .மனிதனின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் தன்னை நெறி படுத்த மதங்களை உருவாக்கினான் .
அதில் அன்பை மட்டுமே பிரதானமாக வைத்தான் .

               நல்ல வேலை அன்பிற்கு பஞ்சம் வைக்காமல் இன்னும் சில இடங்களில் அன்பு எனும் அகல் விளக்கு ஒளிரவே செய்கிறது .,முன் ஒரு காலத்தில் இப்பொழுது  இருக்கும் நவீன தொடர்புகள் அற்ற பொழுதில் அன்பு செழித்திருந்தது . அப்போதும் போட்டி  , பொறாமை , காழ்ப்புணர்ச்சி , வர்ண வேறுபாடுகள் என பிரிந்திருந்தாலும் அங்கே எதிர்பார்பற்ற அன்பு இருந்தது ,
பசியோடு இருப்போர்க்கு அன்ன  சாத்திரங்களும் , நோயுற்றோர்க்கு ஆதுர  சாலைகளும் என மக்களை நேசிக்கும் அரசு இயங்கியது. இப்படிப்பட்ட அன்பை தேடிய பயணம் இது .............
                 
                      உண்மையில் அன்பு என்பது எது ? எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அக்கறை என்று எடுத்துக்கொள்ளலாமா ..? அக்கறை  காட்டினால்  அன்பு ஆகுமா? இல்லை எனில் எது அன்பு ? ஆதி மனிதன் கூட்டமாய் வாழ்ந்தபோது , அக்கறையாய்  வாழ்ந்திருப்பான் .அங்கு தலைவன் தன்  சொந்தங்களுக்காக அக்கறையாக வேட்டையாடி  உணவை பகிர்ந்திருப்பான்  ..எனில் துன்பம்  எப்படி வந்தது , மனக்கசப்பு எப்படி உருவானது ? மனிதனின் அனுபவம் வளர வளர  நல்லவை தீயவைகளை பகுத்து ஆராயும் பக்குவம் வந்தது , கவலைகளும் , துன்பங்களும் தாக்கிய பிறகு, மன  நிம்மதியை நாடினான் .,

இங்கு நிம்மதியை தீர்க்க , கடவுள் எப்படி தோன்றினார் ,அவர் எப்படி தோன்றார்கள் ? என்று நிறைய பேசுவோம் காத்திருங்கள் .....!!



Wednesday, July 26, 2017

தோல்வியை துவம்சம் செய்









அன்பு உறவுகளே ...

             நான் பிரபு ...வாழ்வில் என்றும் மகிழ்வும் ,ஏமாற்றமும் , சோதனையும் ,சாதனையும் பெற்றவன்..சுயநலம் பொருந்திய பல பொய் முகங்களை கண்டு அதிர்ந்து    போய்   நிலை தடுமாறி இருக்கிறேன் ....
         
              நல்லவர்கள் என்று நினைத்து பழகி அவர்களின் நிஜ முகம் தெரியும் போது மனம் தடுமாற செய்யும் . எல்லோரும் இப்படியா என்ற எண்ணம் மேல் ஓங்கும் .. !யாரை நம்புவது என்ற ஒற்றை கேள்வி மனதை கலங்கடிக்கும் .யாரை கண்டினும் ஒரு விதசுதாரிப்புடனும் ,சந்தேகத்துடனும்  பழகும் எண்ணம் வரும் . உண்மையில் எல்லோரும் இப்படி தான் வாழ்கின்றனர் . அவர் பார்வையில் நாம்  தவறாகவும் . நம் பார்வையில் அவர் தவறாகவும் காட்சி தருகிறோம் ....இதற்கு தீர்வு தான் என்ன ?......!
                நான் கண்டது , காண்பது , அனுபவித்தது ,என  பேச போகிறேன்......

எண்ணங்கள் ...

                        மனித மனம் உண்மையில் மிக அபூர்வமானது .ஆண்  பெண்  என்ற பேதமின்றி அது செய்யும் லீலைகள் அதிகம் நாம்  அனுபவத்தின் மூலம் அதை மாற்ற  தெரிந்தவர் உண்மையில் வெற்றி கொள்கிறார் ..
                   
                            துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க  ஒரு அழகிய தமிழ் வாக்கியம் உண்டு , பலருக்கு இது வியப்பளிக்கும் வாக்கியம்.,  அது எப்படி முடியும் ?  எவனோ ஒரு முட்டாள் சொல்லியதை இங்கு வந்து உளறுகிறான்..! என்று என்னை வசை பாட  தோண்றும். இல்லை !நிச்சயம் இல்லை !. என் அழகிய தோல்விகளின் விளிம்புகளில் நான் நன்றாக சிரித்திருக்கிறேன் .. மற்றவர் பார்வைக்கு அது விரக்தி சிரிப்பாக தோன்றினாலும் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்  .

                       காரணம்  என் ஒவ்வொரு  முட்டாள் தனத்தையும்  என் தோல்வி எனக்கு காட்டி கொடுத்திருக்கிறது . அதை சரி செய்யும் வாய்ப்பை தோல்வி எனக்கு தந்திருக்கிறது , அதன் மூலம் கிடைத்த பாடம் எனக்கு மிக பெரிய வெற்றியை  வசமாக்கும் வித்தையை  சொல்லி  தருகிறது...

                                   உண்மையில் நாம் நம் எண்ணங்களின் படியே நடக்கிறோம் ..
நம் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் மாபெரும் சக்தி உண்டு .அதை சரியாக கணிப்பவர் வெற்றி பெறுகிறார் .நேர்மறை  எண்ணங்கள் என்றுமே ஆச்சர்யமான விடைகளை தருகின்றன . அனைத்திலும் நேர்மறையாக சிந்திப்பவன் நிச்சயம் வெற்றியாளனாக  மாறுகிறான் .சமீபத்தில் எங்கோ படித்த ஒரு வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது
                                  எண்ணங்கள் செயல்களாக  மாறும் ...
சாதாரணமாக பார்த்தால் வெறும் வார்த்தையாக தோன்றினாலும் இதற்கு மகத்தான சக்தி உள்ளது .நாம் நம் மனதில் என்ன எண்ணுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம் .  உண்மையில் நமக்கு என்ன வேண்டும் எது வேண்டாம் என்று நாம் சிந்திப்பது இல்லை
                        எல்லாமே கன  நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் பல நேரங்களில் நாம் தோல்வியை தழுவி இருக்கிறோம் . தொட்டுவிடும் தூரத்தில், வெற்றிக்கு மிக அருகில் சென்றும் நம் வெற்றி., பறிபோன நேரங்களும் உண்டு . அந்த கணம் அந்த நேரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து நம் அடுத்த வெற்றி தீர்மானிக்க படிகிறது


                                 உங்கள் முடிவுகள் சிறக்க ஒரு எளிய உபாயம் சொல்கிறேன் கேளுங்கள். 
                           1. எந்த முடிவு எடுத்தாலும் ஒரு நிமிடம் யோசியுங்கள் 
                           2. அப்படி யோசிப்பதற்கு எப்போதும் அமைத்தோடு இருக்க                                            பழகுங்கள் 
                            3.அந்த அமைதி வேண்டுமெனில் பரபரப்பு இல்லாமல் இருக்க கற்று கொள்ளுங்கள் .
                             4. நம்மை போலவே நம் முன்னாள் இருப்பவரும் அனைத்து உணர்வும் நிரம்பிய ஒரு மனிதன் என்ற எண்ணத்தை உணருங்கள். இந்த வார்த்தைகள் எனக்கு எழுத்து சித்தர் பாலகுமாரனின் வார்த்தைகள் , எனக்கு உற்சாக ஊற்றாக அமைத்த பொன்  எழுத்துக்கள் .

                       உண்மையில் தோல்வி என்ற ஒன்றை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை . ஒரு முறை மிக பெரிய தொழில் அதிபர் ஒருவரிடம் 
வானொலி நிலையத்தார் பேட்டி எடுத்தார்கள் 

               நீங்கள் இன்று மிக பெரிய தொழில் அதிபர் . உங்கள் மீது உங்கள் பகுதி மக்கள் மிகுந்த மரியாதையை கொண்டு  உள்ளனர் . உங்கள்  வெற்றிக்கான காரணம்  என்ன ? என்ற கேள்வி முன் வைக்க பட்டது ,அதற்கு அவர் சிரித்து  கொண்டே சொனார் 
                      :என் எல்லா வெற்றிக்கும் காரணம் என் தோல்விகள்: 
பேட்டி எடுத்தவர் அதிர்ந்து போனார் .தொழில் அதிபர் தொடர்ந்து சொன்னார் 
                        "ஆம் ! என் தோல்விகள் எனக்கு நிறைய கற்று கொடுத்தன ,என் கவனமின்மையை சுட்டி கட்டின.! . நான் எங்கெல்லாம் சறுக்கினேன் ?  என்று 
பட்டியல் இட்டு katin நான் ஒவ்வொரு  முறை தோற்கும் போதும் இறைவனுக்கு நன்றி கூறுவேன் .
            இறைவா எனக்கு மிக சிறந்த அனுபவத்தை தந்ததற்கு நன்றி . உங்களால் இன்று நான் என்னை புரிந்து கொண்டேன் , இதன் மூலம் என் தோல்வியை வெற்றியாக மற்றும் வித்தையை  நான் கற்று கொண்டேன் .
                   ஆனால்  இப்போதெல்லாம் தோல்வி என் அருகில் வருவது இல்லை.... காரணம் ?
              . அந்த தோல்வியை நான் என் கடின உழைப்பால் துவம்சம் செய்து வெற்றியை வசமாக்கினேன் . என்றார்
                            ஆம் நண்பர்களே உண்மையில் நீங்கள்   அற்புதமானவர்கள்........
வெற்றி மட்டுமே நாம் இலக்கு என்று இருந்தால் நாமும் தோல்விகளை துவம்சம் செய்யலாம் .

                                      அதை செய்ய போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
                 
                                                                       இப்படிக்கு
                                                                               ந வா பிரபு                                                                

     







அடுத்து : :                       யாவரும் கேளீர்
                     மனிதம் தேடிய பயணத்தின் அடுத்த நகர்வு இது


                                                     பேசுவோம்
தொடருங்கள்
உங்கள் கருத்துக்களை கீழ் பதிவிடுங்கள்
நன்றி



                          






                          

Thursday, July 20, 2017

தகடூர்

மிக பெரிய புண்ணிய பூமியாம்  இந்த தமிழகத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் . மும்முடி சோழனும் , பாண்டிய சேர நாட்டவரும் பேணி வளர்த்த இன்தமிழகம் , முன்பெல்லாம் பலதரப்பட்ட தாக்குதல்களையும் , சோதனைகளையும் கண்டுள்ளது,

பல மதங்கள்  பல கலாச்சாரங்கள் , பலவித சடங்குகள் , வாழ்வியல் நெறிகள் என ஏராளமாக இருந்தன , இருப்பினும்
இந்நாடுகள் மொழிபற்றில் ஒன்றாகவே இருந்தன, சேர சோழ பாண்டிய மண்டலங்களுக்குள் உரிமை போராட்டங்கள் நிரம்ப இருப்பினும் அமுத மொழியாம் செந்தமிழை விட வில்லை
முத்தமிழ் வளர்த்த மூவேந்தர்களுக்கு நன்றி செலுத்துவோமாக ..
இந்த பேரரசுகளின் கீழ் கப்பம் செலுத்தி சிற்றரசுகளாக பல தேசங்கள் இருந்தன , அவர்களில் முதன்மையானவர்கள் கடையெழு மன்னர்கள்
பாரி , பேகன் , காரி , ஆய் , அதியன் , நள்ளி  , ஓரி, என்ற மாபெரும் குணவன்கள் மன்னர்களாக இருந்தனர்

பேகன் மயிலுக்கு வழங்கிய போர்வையும் , பாரி முல்லைக்கு கொடுத்த தேறும் , காரி புலவர்க்கு தானம் தந்த நாடும் , அவ்வைக்கு அதியன் தந்த நெல்லிக்கனியும் , நீதி வேண்டி வருவோர்க்கு நீதி தந்த நள்ளியும், கூத்தாடுவோர்க்கு வீடு தந்த ஓரியும்  என அவர்தம் புகழ் உலகெலாம் பரவியது

இவர்களில் என்னை கவர்ந்தவர் என் மண்ணின் மாணிக்கம் அதியன் .


சேரர் கிளை வந்தாலும் , சிறிய நாட்டில் எளிய எழினியாக பிறந்து ,தம் கொடை திறத்தால்  அதியமான் நெடுமான் அஞ்சியாக உயர்ந்த வேங்கை இவன் , இவரின் புகழ் பற்றி தகடூர் யாத்திரையில் அரிசில் கிழார் மிக அழகாக விவரிக்கிறார் ,
     இத்தனைக்கும் அரிசில் கிழார் , அதியமானின் அமைச்சரோ , அவை புலவரே அல்ல , அதியனின் எதிரி சேர மன்னரின் தலைமை அமைச்சர் , நற்றமிழ் புலவர் , தகடூர் போரில் நேரில் கண்டவற்றை தகடூர் யாத்திரை ஆக்கி அதியனின் புகழை தரணி எங்கும் பரவ செய்தவர் , அதியமான் நெடுமான் அஞ்சியின் அஞ்சா நெஞ்சம் கொண்டு அஞ்சி நடுங்கினர் பகையோர் ...

   , வள்ளல்கள் எழுவரின் தர்மத்தில் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்தது , அதில் முக்கியமானவர் திருக்கோவிலூர் மலையமான் திருக்காரி
ஆழ்ந்த சிவநேசனான மலையமான் காரி , தன் மக்களை பண்புடன் பேணி காத்தான் , அவரின் பெருமையும் புகழும் அவருக்கு  ஆணவம் தந்தது

ஒருபுறம் அதியனின் புகழ் மெல்ல மெல்ல தகடூர் தாண்டி திருக்கோவிலூர் மன்னனின் செவியை அடைந்தது ,எங்கு திரும்பினும் அதியனின் புகழ் , அப்பழுக்கில்லாத வீரமும்  , தானமும் , தவமும் , கல்வியும் என அனைத்தும்
மலையமான் காரியின் சினத்தை சீண்டியது

விளைவு தகடூரை நோக்கி போரை துவங்கினான் ,தினவெடுத்த தோள்களுடன்
காளையாக பாய்ந்து வரும் அதியனின் வீரத்திற்கு முன் தோற்று அடிபட்ட வேங்கையாக திரும்பினான்

எப்போதுமே அவமான பட்ட மனித மனம் மிக கொடுமையானது , அது எப்போதுமே பழிவாங்க காத்திருக்கும் மலையமான் அத்தியமானிற்கு எதிரிகளை எல்லாம் ஒன்று திரட்டி மீண்டும் போரில் குதித்தான் , இம்முறை தனியனாய் அல்ல , பலம் பொருந்திய சேர சோழ பாண்டிய பேரரசுகள் உதவின, அதனுடன் தொண்டை மண்டலமும் சேர்ந்து அதியனை போருக்கு அழைத்தன

சாதாரணமாகவே வேட்டைக்கு செல்லும் வேங்கை வலிய போருக்கு அழைப்பின் மறுப்பனோ , சமுத்திரம் மோதுவதை போல படைகள் மோதின , தகடூர் வீரர்களின் திறனை சாதாரணமாக எடை போட்ட அப்படைகள் பின்வாங்கின , தத்தம் படைகள் பின்வாங்குவதை கண்ட பேரரசுகள் மீண்டும் பெருமளவில் படைகளை அனுப்பின

இப்படியாக அதியமான் கோட்டையின் மீது சுமார் ஒரு வருடம் முற்றுகை நடைபெற்றது , கோட்டையின் உறுதியும் வீரர்களின் பெருவீரமும் பகைவர் முன் மண்டியிடாமல் நாட்டை காப்பாற்றியது . அதியமான் நெடுமனின் மாபெரும் இரட்டை படை தலைவர்களான பெரும் பாக்கணும் சிறும்பாக்கணும் எதிர்களின் படைகளை சிதறடித்தனர் .

தளபதிகளின் தாக்குதலுக்கே தடுமாறிய படைகள் , கோட்டையை உடைக்க அரும்பாடு பட்டன , அதியமான் கோட்டையின் பெரிய அகழியும் ,அதில் வாய்பிளந்த படி காத்திருக்கும் முதலைகளும் , ஆயிரம் பேர் தாக்கினாலும் உடைக்க முடியா கதவும் என அதை கடக்க முயல்வது கனவில் நடவா காரியம், தொடர் தோல்வியால் துவண்ட எதிரி படைகள் சூளிச்சியை கையாண்டன

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது நாட்டை காக்கும் ராணுவத்திற்கு மட்டும் அல்ல , ஒவொரு குடிமகனுக்கும் உண்டு , எல்லா தேசத்திலும் எக்காலத்திலும் பணத்திற்கு விலை போகும் மடையர்கள் உள்ளனர் , கோட்டையின் ரகசிய வழிகளை அறிய பல தரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ள பட்டன , அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர் ,

பொற்காசுகளுக்கு மயங்கி தகடூரின் மக்களின் சிலர் சுரங்க வழிகளை காட்டி கொடுத்தனர் , அதன் வழியாக கோட்டைக்குள் பிரவேசித்த படைகள் தகடூரின் படைகள் மீது சரமாரியாக மோதினர்

சேர மன்னன் இரும்பொறை தகடூர் வீரர்களை கொன்று குவித்தான் , தனி ஒருவனாக அதியமான் நெடுமான் அஞ்சி ஆயிரமாயிரம் வீரர்களை கொன்று குவித்தான் .

வீரத்தால் வெல்ல முடியாத அதியமானை சூழ்ச்சியில் வென்றனர் ,இறுதியில் பார் போற்றும் மன்னன் அதியமான் , சேர மன்னன் இரும்பொறை வாள் வீச்சுக்கு இரையானான் , மார்பிலே குருதி பொங்க மண்ணில் வீழ்ந்தான் ,

வீழ்ந்தது அதியன் மட்டும் அல்ல தமிழும் தான்,

ஓடோடி வந்து செந்தமிழால் கதறினாள் அவ்வை .

வீர மரணம் கொண்ட அதியமானும் ஈம சடங்குகளை செய்தான்
சேரன் இரும்பொறை ,அவனும் கண்ணீர் சிந்தினான் , அவன் பேரரசன் ஆயினும் அதியனின் வீரத்தால்  ஈர்க்க பட்டான்

பின் தகடூரை இரும்பொறை சிறப்பாகவே ஆட்சி செய்தான் , இருப்பினும்
அதியனின் புகழ் மறையுமோ , அவர் தம் வீரம் மறையுமோ , மறையாது

வாழ்க அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழ்
வாழ்க
வாழ்க
வாழ்க

                             இவன்
                                                 ந வா பிரபு ....

அடுத்து ..................

 தோல்வியை துவம்சம் செய் ................!


தஞ்சை


தஞ்சை 
தொடர்ச்சியான பயணங்களின் பொழுது நிறைய கற்கிறேன்
நல்லோர் பலரை காண்கிறேன். மகிழ்ச்சியுடன் தொடங்கிய காலை பொழுது ஒன்றில் , ஜன்னல் ஒர இருக்கையில் கையில் பிடித்த புத்தகம் ஒன்றை புரட்டிய படி ஒரு பயணம் .அது தஞ்சை

            இது வரை நான் பார்த்து அறியாத பல முகங்களை காண்கிறேன் , கருமலை நகரின் மலைகளையும் காடுகளையும் கண்ட என்கண்கள் தஞ்சை தரணியை கண்டு வியந்தன . காவிரியின் பிரமாண்டம் கண்டு நான் வாய் பிளந்தேன்

        நீண்ட நெடிய, அகண்ட காவிரியை கண்டதும் என் தென் பெண்ணை நதியை ஏனோ மனம் நினைத்தது , தஞ்சை ஆண்டவனின் நகரம் , சோழர்களின் தலைநகரம் , ராஜராஜ சோழன் வாழ்ந்து ஆண்ட நகரம் , இங்கு தானே சோழர் குலம்  தழைத்தது , இங்கு இருந்து தானே உலகம் வியக்கும் பெரிய கோவிலுக்கு திட்டமிட்டான் , மெதுவாக மனம் நிகழ் காலம் வந்தது ,

       இன்றைய தஞ்சை , கால சூழலால் நிரம்ப மாறி  இருந்தது தஞ்சை எனக்கு முதலில் பரிச்சயமானது அமரர் கல்கியில் எழுத்தில் , பின்பு  தஞ்சை மக்களின் வாழ்வியல் முறைகள் , தஞ்சை ராஜராஜன் காலத்தில் எத்தகைய உயர்ந்த வாழ்க்கையில் இருந்தது, உலகிற்கே நாகரீகம் கற்று தந்தது என்று பாலகுமாரனின் உடையாரின் முழுதும் அறிமுகமானது ,
நிகழ்கால தஞ்சை பெரிய மாற்றத்துடன் இருந்தது ,மக்களின் வாழ்கை முறையும் மாறி தான் இருந்தது , ரயில் நிலையத்தில் இருந்து கார் பிடித்து தஞ்சை பெரிய கோவில் என்று சொன்னதும்,
   சார் .. நூறு ருபாய் சார் என்றான் .
      நான் மிகவும் வியந்தேன் , வெறும் ௩ கிலோ மீட்டர் கூட இருக்காது அதற்கு நூறு  ரூபாயா  என்று வியந்து, சரி என்று தலை ஆட்டி சென்றேன்

என் கண் முன்னே ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் கோவிலை கண்டதும் கண்களில் கண்ணீர் துளிர்த்தது .



எத்தனை வருடங்கள் .அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரையும் கண்ட கோவில் இது , இதற்காக உருவான போர்கள் , இதற்காக மடிந்த வீரர்கள் இதற்காக செய்த தியாகங்கள் என அத்தனையும் நினைவிற்கு வந்தன .

ஒரு சாம்ராஜ்யத்தின் வெற்றி என்பது எத்தனை வருடங்கள் ஆட்சி என்பது அல்ல , ஆயிரம் வருடங்கள் கழித்தும் நிலைத்து நிற்பது . சோழனின் வெற்றி அப்படி தான் நின்றது , விஜயாலயனில் ஆரம்பித்து சோழர் குலம் வீழ்ந்தாலும் அவர் தம் வெற்றி கல்லிலே செதுக்க பட்டது ,இதனை ஆண்டுகள் ஆயினும் தமிழர் நெஞ்சில் நின்றது , இது தான் வெற்றி , இது தான் வரலாறு ,

இன்னும் சொல்ல ஆயிரமாயிரம் உண்டு . என் பார்வையில் இன்னும் அதிகம் , பெரிய கோவிலின் ஒவொரு கல்லிலும் தனி வரலாறு உண்டு , தரணியை ஆண்டவனின் மாபெரும் புகழை கண்டதும் நிஜம் பெருமையால் நிமிர்கிறது
வாழ்க சோழம் , வாழ்க தமிழர் , வாழ்க எம்மக்கள்


அடுத்து தகடூர் நாயகன் அதியன் ...


                             இவன் 

                                                 ந வா பிரபு ....









              

மீண்டும் நான்

எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.  இந்த தளத்திற்கு வந்து வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு போலவே இருப்பதில்லை பல சூழல்கள் எல்லாம் நம்மை ஆட்டுவ...