அன்பு உறவுகளே ...
நான் பிரபு ...வாழ்வில் என்றும் மகிழ்வும் ,ஏமாற்றமும் , சோதனையும் ,சாதனையும் பெற்றவன்..சுயநலம் பொருந்திய பல பொய் முகங்களை கண்டு அதிர்ந்து போய் நிலை தடுமாறி இருக்கிறேன் ....
நல்லவர்கள் என்று நினைத்து பழகி அவர்களின் நிஜ முகம் தெரியும் போது மனம் தடுமாற செய்யும் . எல்லோரும் இப்படியா என்ற எண்ணம் மேல் ஓங்கும் .. !யாரை நம்புவது என்ற ஒற்றை கேள்வி மனதை கலங்கடிக்கும் .யாரை கண்டினும் ஒரு விதசுதாரிப்புடனும் ,சந்தேகத்துடனும் பழகும் எண்ணம் வரும் . உண்மையில் எல்லோரும் இப்படி தான் வாழ்கின்றனர் . அவர் பார்வையில் நாம் தவறாகவும் . நம் பார்வையில் அவர் தவறாகவும் காட்சி தருகிறோம் ....இதற்கு தீர்வு தான் என்ன ?......!
நான் கண்டது , காண்பது , அனுபவித்தது ,என பேச போகிறேன்......
எண்ணங்கள் ...
மனித மனம் உண்மையில் மிக அபூர்வமானது .ஆண் பெண் என்ற பேதமின்றி அது செய்யும் லீலைகள் அதிகம் நாம் அனுபவத்தின் மூலம் அதை மாற்ற தெரிந்தவர் உண்மையில் வெற்றி கொள்கிறார் ..
துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க ஒரு அழகிய தமிழ் வாக்கியம் உண்டு , பலருக்கு இது வியப்பளிக்கும் வாக்கியம்., அது எப்படி முடியும் ? எவனோ ஒரு முட்டாள் சொல்லியதை இங்கு வந்து உளறுகிறான்..! என்று என்னை வசை பாட தோண்றும். இல்லை !நிச்சயம் இல்லை !. என் அழகிய தோல்விகளின் விளிம்புகளில் நான் நன்றாக சிரித்திருக்கிறேன் .. மற்றவர் பார்வைக்கு அது விரக்தி சிரிப்பாக தோன்றினாலும் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன் .
காரணம் என் ஒவ்வொரு முட்டாள் தனத்தையும் என் தோல்வி எனக்கு காட்டி கொடுத்திருக்கிறது . அதை சரி செய்யும் வாய்ப்பை தோல்வி எனக்கு தந்திருக்கிறது , அதன் மூலம் கிடைத்த பாடம் எனக்கு மிக பெரிய வெற்றியை வசமாக்கும் வித்தையை சொல்லி தருகிறது...
உண்மையில் நாம் நம் எண்ணங்களின் படியே நடக்கிறோம் ..
நம் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் மாபெரும் சக்தி உண்டு .அதை சரியாக கணிப்பவர் வெற்றி பெறுகிறார் .நேர்மறை எண்ணங்கள் என்றுமே ஆச்சர்யமான விடைகளை தருகின்றன . அனைத்திலும் நேர்மறையாக சிந்திப்பவன் நிச்சயம் வெற்றியாளனாக மாறுகிறான் .சமீபத்தில் எங்கோ படித்த ஒரு வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது
எண்ணங்கள் செயல்களாக மாறும் ...
சாதாரணமாக பார்த்தால் வெறும் வார்த்தையாக தோன்றினாலும் இதற்கு மகத்தான சக்தி உள்ளது .நாம் நம் மனதில் என்ன எண்ணுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம் . உண்மையில் நமக்கு என்ன வேண்டும் எது வேண்டாம் என்று நாம் சிந்திப்பது இல்லை
எல்லாமே கன நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் பல நேரங்களில் நாம் தோல்வியை தழுவி இருக்கிறோம் . தொட்டுவிடும் தூரத்தில், வெற்றிக்கு மிக அருகில் சென்றும் நம் வெற்றி., பறிபோன நேரங்களும் உண்டு . அந்த கணம் அந்த நேரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து நம் அடுத்த வெற்றி தீர்மானிக்க படிகிறது
உங்கள் முடிவுகள் சிறக்க ஒரு எளிய உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்.
1. எந்த முடிவு எடுத்தாலும் ஒரு நிமிடம் யோசியுங்கள்
2. அப்படி யோசிப்பதற்கு எப்போதும் அமைத்தோடு இருக்க பழகுங்கள்
3.அந்த அமைதி வேண்டுமெனில் பரபரப்பு இல்லாமல் இருக்க கற்று கொள்ளுங்கள் .
4. நம்மை போலவே நம் முன்னாள் இருப்பவரும் அனைத்து உணர்வும் நிரம்பிய ஒரு மனிதன் என்ற எண்ணத்தை உணருங்கள். இந்த வார்த்தைகள் எனக்கு எழுத்து சித்தர் பாலகுமாரனின் வார்த்தைகள் , எனக்கு உற்சாக ஊற்றாக அமைத்த பொன் எழுத்துக்கள் .
உண்மையில் தோல்வி என்ற ஒன்றை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை . ஒரு முறை மிக பெரிய தொழில் அதிபர் ஒருவரிடம்
வானொலி நிலையத்தார் பேட்டி எடுத்தார்கள்
நீங்கள் இன்று மிக பெரிய தொழில் அதிபர் . உங்கள் மீது உங்கள் பகுதி மக்கள் மிகுந்த மரியாதையை கொண்டு உள்ளனர் . உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன ? என்ற கேள்வி முன் வைக்க பட்டது ,அதற்கு அவர் சிரித்து கொண்டே சொனார்
:என் எல்லா வெற்றிக்கும் காரணம் என் தோல்விகள்:
பேட்டி எடுத்தவர் அதிர்ந்து போனார் .தொழில் அதிபர் தொடர்ந்து சொன்னார்
"ஆம் ! என் தோல்விகள் எனக்கு நிறைய கற்று கொடுத்தன ,என் கவனமின்மையை சுட்டி கட்டின.! . நான் எங்கெல்லாம் சறுக்கினேன் ? என்று
பட்டியல் இட்டு katin நான் ஒவ்வொரு முறை தோற்கும் போதும் இறைவனுக்கு நன்றி கூறுவேன் .
இறைவா எனக்கு மிக சிறந்த அனுபவத்தை தந்ததற்கு நன்றி . உங்களால் இன்று நான் என்னை புரிந்து கொண்டேன் , இதன் மூலம் என் தோல்வியை வெற்றியாக மற்றும் வித்தையை நான் கற்று கொண்டேன் .
ஆனால் இப்போதெல்லாம் தோல்வி என் அருகில் வருவது இல்லை.... காரணம் ?
. அந்த தோல்வியை நான் என் கடின உழைப்பால் துவம்சம் செய்து வெற்றியை வசமாக்கினேன் . என்றார்
ஆம் நண்பர்களே உண்மையில் நீங்கள் அற்புதமானவர்கள்........
வெற்றி மட்டுமே நாம் இலக்கு என்று இருந்தால் நாமும் தோல்விகளை துவம்சம் செய்யலாம் .
அதை செய்ய போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
ந வா பிரபு
அடுத்து : : யாவரும் கேளீர்
மனிதம் தேடிய பயணத்தின் அடுத்த நகர்வு இது
பேசுவோம்
தொடருங்கள்
உங்கள் கருத்துக்களை கீழ் பதிவிடுங்கள்
நன்றி

No comments:
Post a Comment